95
பரலோக எம் தந்தையே
பரலோக எம் தந்தையே உந்தனின் நாமமே
பரிசுத்தமானதால் பரிசுத்தமாக்கிடுமே (2)
பரலோக எம் தந்தையே…
பரலோகில் செய்யும் உம் சித்தம்
பூமியில் என்றும் நிறைவேறவே (2)
பரனே உம் இராஜ்ஜியமே புவிதனில் வந்திடவே
பக்தியாய் வாழ்ந்திடவே போதித்து நடத்திடுமே
பரலோக எம் தந்தையே…
அன்றன்று வேண்டிய ஆகாரமும்
இன்றும் எமக்கே நீர் தந்திடுமே (2)
ஆவியின் ஆகாரமும் ஆண்டவா அருள் தாருமே
ஆத்துமா வாழ்ந்திடவே ஆவியின் கனி தாருமே
பரலோக எம் தந்தையே…
குற்றம் செய்வோர்க்கு மன்னிக்கவே
குறைவில்லா அன்புள்ளம் தாருமே (2)
எம் குற்றம் மன்னிப்பீரே இயேசுவே போற்றுகின்றோம்
எங்களின் ஜெபம் கேட்பீரே ஏற்றுக்கொள்ளும் எங்களை
பரலோக எம் தந்தையே…