97
அழைக்கும் தெய்வம் இயேசு
அழைக்கும் தெய்வம் இயேசுவைப் பார் உன் அன்பைக் கேட்கும் நேசரைப் பார் உன்னைத் தாவியே அணைத்திடவே அவர் எடுத்த கோலம் சிலுவையைப் பார் (1) பாவிக்கு ஜீவ ஊற்றானார் - இந்த பாருக்கு ஜீவ வழியானார் (2) நேசர் அன்பு வழி சென்றிடுவாய் - அவர் அழைப்பை ஏற்றுக் கொண்டிடுவாய் (2) (அழைக்கும் தெய்வம்...) காயங்களாலே வழி திறந்தார் - அன்று கல்வாரியிலே உயிர் துறந்தார் (2) நீசன் உன்னைச் சேர்த்திடவே - அன்று நேசனாகவே உயிர்த்தெழுந்தார் (2) (அழைக்கும் தெய்வம்...)