Home
99

ஒளி தரும் தீபங்கள்

          ஒளி தரும் தீபங்கள்
சுடர் வீசும் தீபம் நாம்
கலங்கரை விளக்கைப் போல்
இயேசுவில் ஒளி பெறுவோம்

(ஒளி தரும் தீபங்கள்...)

மலைமேல் ஜெலித்திடும்
மாநகர் போலவே
மண்ணகம் காணவே
ஒளியினை வீசுவோம்
ஆண்டவர் இயேசுவின்
உறவினில் நெருங்கிட
அணையாத ஜோதியாய்
சுடரை வீசுவோம் (2)

(ஒளி தரும் தீபங்கள்...)

இருளை நீக்கிட
ஒளியாய் வந்தவர்
அருள் நிறை ஒளியினை
மேதினில் வீசுவோம்
வார்த்தையைப் பிடித்துமே
சுடர்களைப் போலவே
எழும்பிப் பாரினில்
சுடரை வீசுவோம் (2)

(ஒளி தரும் தீபங்கள்...)

அழிவின் பாதையில்
கல்லறை சென்றிடும்
ஆயிரம் ஆயிரம்
தரிசனம் காணுவோம்
சுவிசேச ஒளியினை
யாவரும் கண்டிட
துணிந்து என்றென்றுமாய்
சேவையைச் செய்குவோம் (2)

(ஒளி தரும் தீபங்கள்...)
        

Listen to the Song

Song 99
0:00 / 0:00
Speed:

Share this Song