B10
கடந்து வந்த பாதைகளை
கடந்து வந்த பாதைகளை திரும்பி பார்க்கிறேன் கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன் நன்றி சொல்கிறேன் நான் நன்றி சொல்கிறேன் (3) அப்பா உமக்கு நன்றி ராஜா உமக்கு நன்றி (2) அனாதையாய் அலைந்தே நான் திரிந்தேன் ஐயா (1) அழாதே என்று சொல்லி அணைத்தீர் ஐயா (1) (அப்பா உமக்கு...) எதிராய் வந்த சூழ்ச்சிகளை முறியடித்தீரே (1) எந்தநிலையிலும் உம்மைத் துதிக்க வைத்தீரே (1) (அப்பா உமக்கு...) பாடுகளை சுமந்து செல்ல பெலன் தந்தீரே (1) பரிசுத்தமாய் வாழ்வு வாழ துணைசெய்தீரே (1) (அப்பா உமக்கு...) ஒருநாளும் குறைவில்லாமல் உணவு தந்தீர் (1) உறைவிடமும் உடையும் தந்து காத்து வந்தீர் (1) (அப்பா உமக்கு...) பாதை அறியா குருடனைப்போல் வாழ்ந்தேன் ஐயா (1) பாசத்தோடு கண்களையே திறந்தீர் ஐயா (1) (அப்பா உமக்கு…...)