B13
ஆராதனை நாயகன் நீரே
ஆராதனை நாயகன் நீரே
ஆராதனை வேந்தனும் நீரே (2)
ஆயுள் முடியும் வரை
உம்மை தொழுதிடுவேன் (2)
(ஆராதனை நாயகன்...)
ஆயிரம் பேர்களில் சிறந்தோர்
ஆண்டவர் இயேசு நீரே (2)
விடிவெள்ளியே எந்தன் பிரியம் நீரே
என்றென்றும் வாழ்த்திடுவேன் (2)
(ஆராதனை நாயகன்...)
மாந்தர்கள் போற்றிடும் தெய்வம்
மகிமையின் தேவன் நீரே (2)
முழங்கால் யாவுமே மடங்கிடுமே
மகிழ்வுடன் துதித்திடுவேன் (2)
(ஆராதனை நாயகன்...)
முடிவில்லா ராஜ்ஜியம் அருள
திரும்பவும் வருவேன் என்றீர் (2)
ஆயத்தமாய் நான் சேர்ந்திடவே
அனுதினம் வணங்கிடுவேன் (2)
(ஆராதனை நாயகன்…...)