Home
B14

உம்மோடு இருப்பது தான்

          உம்மோடு இருப்பது தான்
உள்ளத்தின் வாஞ்சையையா
உம் சித்தம் செய்வது தான்
இதயத்தின் ஏக்கமையா (4)

இயேசையா உம்மைத்தானே
என் முன்னே நிறுத்தியுள்ளேன் (2)

எனக்காக யாவையும் செய்பவரே
செய்து முடிப்பவரே (2)
என் பாரங்கள் என் சுமைகள் (1)
உம் பாதத்தில் இறக்கி வைத்தேன் (1)

(இயேசையா...)

இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும்
கிருபையும் உள்ளவரே (2)
என் ஜீவனை அழிவில் நின்று (1)
மீட்டவரே என் மேய்ப்பரே (1)

(இயேசையா...)

எபிநேசரே எல்எலியோன்
என்றுமே உயர்ந்தவரே (2)
எல்ஷடாய் சர்வ வல்லவரே (1)
எல்ரோயீ காண்பவரே (1)

(இயேசையா…...)
        

Listen to the Song

Song B14
0:00 / 0:00
Speed:

Share this Song