Home
B15

எந்தன் கன்மலையானவரே

          எந்தன் கன்மலையானவரே
என்னை காக்கும் தெய்வம் நீரே (2)
வல்லமை மாட்சிமை நிறைந்தவரே
மகிமைக்கு பாத்திரரே (2)

ஆராதனை உமக்கே (4)

உந்தன் சிறகுகளின் நிழலில்
என்றென்றும் மகிழச் செய்தீர் (2)
தூயவரே என் துணையாளரே
துதிக்குப் பாத்திரரே (2)

(ஆராதனை...)

எந்தன் பெலவீன நேரங்களில்
உம் கிருபை தந்தீரைய்யா (2)
இயேசு ராஜா என் பெலனானீர்
எதற்கும் பயமில்லையே (2)

(ஆராதனை...)

எந்தன் உயிருள்ள நாட்களெல்லாம்
உம்மை புகழ்ந்து பாடிடுவேன் (2)
ராஜா நீர் செய்த நன்மைகளை
எண்ணியே துதித்திடுவேன் (2)

(ஆராதனை…...)
        

Listen to the Song

Song B15
0:00 / 0:00
Speed:

Share this Song