Home
B18

என்னைக் கண்டார்

          என்னைக் கண்டார் (இயேசு) என்னைக் கண்டார்
உள்ளங்கையில் என்னை வரைந்து கொண்டார் (2)
கண்ணுக்குள்ளே என்னை வைத்து
கடைசி வரைக்கும் காத்துக் கொள்வார் (2)

இயேசு என் தேவன் இயேசு என் ஜீவன்
இயேசு தான் எனக்கு எல்லாம் எல்லாம் (2)

கட்டவிழ்த்தார் என்னை கட்டவிழ்த்தார்
சத்துருவை அவர் துரத்தி விட்டார் (2)
சாபத்தையும் வியாதியையும்
சாவினால் வென்று ஜெயம் கொடுத்தார் (2)

(இயேசு என்...)

மீட்டுக் கொண்டார் என்னை மீட்டுக் கொண்டார்
பாவத்திலிருந்தென்னை மீட்டுக் கொண்டார் (2)
சொந்த பிள்ளை என்றும் என்னை
உறுதிப்படுத்த தம் ஆவி தந்தார் (2)

(இயேசு என்...)

ஜெயம் தந்தார் இயேசு ஜெயம் தந்தார்
சத்துருவின் மேல் அவர் ஜெயம் தந்தார் (2)
உலகத்தின் மேல் ஜெயமெடுக்க
விசுவாசத்தின் வலிமை தந்தார் (2)

(இயேசு என்…...)
        

Listen to the Song

Song B18
0:00 / 0:00
Speed:

Share this Song