B23
நன்றிபலிபீடம் கட்டுவோம்
நன்றிபலிபீடம் கட்டுவோம்
நல்லதெய்வம் நன்மை செய்தார் (2)
செய்த நன்மை ஆயிரங்கள்
சொல்லி சொல்லி பாடுவேன் (2)
நன்றி தகப்பனே நன்மை செய்தீரே (1)
(நன்றிபலிபீடம்...)
ஜீவன் தந்து நீர் அன்புகூர்ந்தீர்
பாவம் நீங்கிட கழுவி விட்டீர் (2)
உமக்கென்று வாழ பிரித்தெடுத்து
உமது ஊழியம் செய்ய வைத்தீர் (2)
(நன்றி தகப்பனே...)
பார்க்கும் கண்களை தந்தீரய்யா
பாடும் உதடுகள் தந்தீரய்யா (2)
உழைக்கும் கரங்களை தந்தீரய்யா
ஓடும் கால்களைத் தந்தீரய்யா (2)
(நன்றி தகப்பனே...)
இருளின் அதிகாரம் அகற்றிவிட்டீர்
இயேசு அரசுக்குள் சேர்த்துவிட்டீர் (2)
உமக்கு சொந்தமாய் வாங்கிக் கொண்டு
உரிமை சொத்தாக வைத்துக் கொண்டீர் (2)
(நன்றி தகப்பனே…...)