Home
B25

ஆராதனைக்கு தகுதியான தெய்வம்

          ஆராதனைக்கு தகுதியான தெய்வம்
இயேசு நீர் மாத்திரமே
முழு உலகத்திற்கும் மெய்யான தெய்வம்
இயேசு நீர் மாத்திரமே

இயேசு நீர் மாத்திரமே (5)

(ஆராதனைக்கு...)

அன்பு என்றால் என்ன என்றுசொல்லித் தந்த தெய்வம்
இயேசு நீர் மாத்திரமே
பெரும்பாவி மனம் மாற ஏங்குகின்ற தெய்வம்
இயேசு நீர் மாத்திரமே (4)
தம்மை மட்டும் நம்பி வரும்
எந்த பாவ மனிதராயினும்
ஏற்றுக்கொள்ளும் பாசதெய்வமே (3)
ஏற்றுக்கொள்ளும் பாசதெய்வமே

(ஆராதனைக்கு...)

பாவத்தை சுட்டிக்காட்டி கண்டித்துணர்த்தும் தெய்வம்
இயேசு நீர் மாத்திரமே
பாவத்தை மன்னிக்கும் பரிசுத்த தெய்வம்
இயேசு நீர் மாத்திரமே (4)
பாவத்திலிருந்து விடுதலை தருகின்ற
தெய்வம் நீர் மாத்ரமே (2)
தெய்வம் நீர் மாத்ரமே

(ஆராதனைக்கு...)

சொன்ன சொல் தவறாத நம்பிக்கைக்கு உரியவர்
இயேசு நீர் மாத்திரமே
பாரபட்சமில்லாத நேர்மையுள்ள தெய்வம்
இயேசு நீர் மாத்திரமே (4)
பரலோகம் போவதற்கு வழிகாட்ட வந்த தெய்வ
அவதாரம் நீர் மாத்திரமே (2)
அவதாரம் நீர் மாத்திரமே

(ஆராதனைக்கு…...)
        

Listen to the Song

Song B25
0:00 / 0:00
Speed:

Share this Song