B26
இயேசு என்னை இரட்சித்துக்கொண்டார்
இயேசு என்னை இரட்சித்துக்கொண்டார்
தூய இரத்தம் சிந்தி மீட்டெடுத்தார் (2)
பரலோக தேவனின் பரிசுத்த நாமத்தை
சபையிலே தொழுதுகொள்வோம் (2)
(இயேசு என்னை...)
பரிசுத்த ஆவியை இதயத்தில் தந்தெம்மை
மந்தையில் சேர்த்துக்கொண்டார்
அவர் சொந்த ஜனமாய் துதி சொல்லி வருவோம்
வெளிச்சத்தின் பிள்ளைகளாய் (4)
பேர்சொன்னு அழைத்தாரே
நம்மை மகிமை படுத்தினரே (2)
(இயேசு என்னை...)
இராஜரீகமான ஆசாரிய கூட்டமாய்
கட்டப்பட்டு வருகின்றோம்
கிறிஸ்துவின் சபையில் அவயங்களாக
இசைவாக இணைந்திடுவோம் (4)
ஆவிக்கேற்ற மாளிகையில்
நாங்கள் ஒளி வீசும் ஜீவ கற்களே (2)
(இயேசு என்னை...)
நீர் கால்களோரம் நடப்பட்ட மரம்போல்
கனிகொடுத்து செழித்துவாழ்வோம்
ஜீவ வசனத்தை பிடித்து உலகத்தின் சுடராய்
ஒளியாக பிரகாசிப்போம் (4)
தேவசித்தம் நிறைவேற்றுவோம்
தேவராஜியத்தை அறிவிப்போம் (2)
(இயேசு என்னை…...)