Home
B29

நான் நேசிக்கும் தேவன்

          நான் நேசிக்கும் தேவன்
இயேசு என்றும் ஜீவிக்கிறார்
அவர் நேற்றும் இன்றும் நாளை
என்றும் மாறாதவர் (2)

நான் பாடி மகிழ்ந்திடுவேன்
என் இயேசுவைத் துதித்திடுவேன் (2)
என் ஜீவிய காலமெல்லாம்
அவர் பாதத்தில் அமர்ந்திருப்பேன் (2)

கடலாம் துன்பத்தில் தவிக்கும்
வேளையில் படகாய் வந்திடுவார் (2)
இருள் தனிலே பகலவனாய்
இயேசுவே ஒளி தருவார் (2)

(நான் பாடி ...)

பாவ நோயாலே வாடும் நேரத்தில்
மருத்துவராகிடுவார் (2)
மயங்கி விழும் பசிதனிலே
மன்னாவைத் தந்திடுவார் (2)

(நான் பாடி ...)

தூற்றும் மாந்தரின் நடுவில்
எந்தனை தேற்றிட வந்திடுவார் (2)
கால் தளர ஊன்றுகோலாய்
காத்திட வந்திடுவார் (2)

(நான் பாடி ...)

நேசர் என்னோடு துணையாய் ஜீவிக்க
நான் இனி கலங்கிடேனே (2)
எந்தனுக்கே காவல் அவர்
நான் உடல் அவர் உயிரே (2)

(நான் பாடி ...)
        

Listen to the Song

Song B29
0:00 / 0:00
Speed:

Share this Song