B3
என் மீது அன்பு கூர்ந்து
என் மீது அன்பு கூர்ந்து
பலியானீர் சிலுவையிலே
எனக்காய் இரத்தம் சிந்தி
கழுவினீர் குற்றம் நீங்க
பிரித்தெடுத்தீர் பிறக்கும் முன்னால்
உமக்கென்று வாழ்ந்திட (2)
ஆராதனை உமக்கே
அனுதினமும் உமக்கே (2)
(2...)
மாட்சிமையும் மகத்துவமும்
உமக்குத்தானே என்றென்றைக்கும் (2)
வல்லமையும் மகிமையும்
தகப்பனே உமக்குத்தானே
(என் மீது...)
உம் இரத்தத்தால் பிதாவோடு
ஒப்புரவாக்கி மகிழச் செய்தீர் (2)
கறைப்படாத மகனாக - மகளாக
நிறுத்தி தினம் பார்க்கின்றீர் (2)
வல்லமையும் மகிமையும்
தகப்பனே உமக்குத்தானே
(என் மீது...)
மாம்சமான திரையையன்று
கிழித்து புது வழிதிறந்தீர் (2)
மகா மகா பரிசுத்தமும்
திருச்சமூகம் நுழையச் செய்தீர் (2)
வல்லமையும் மகிமையும்
தகப்பனே உமக்குத்தானே
(என் மீது...)