Home
B32

எனக்கொத்தாசை வரும்

          எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
என் கண்களை ஏறெடுப்பேன் (2)

வானமும் பூமியும் படைத்த
வல்ல தேவனிடமிருந்தே (2)
என்னுக்கடங்கா நன்மைகள் வருமே
என் கண்கள் ஏறெடுப்பேன் (2)

(எனக்கொத்தாசை வரும்...)

மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
நிலைமாறி புவியகன்றிடினும் (2)
மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும்
ஆறுதல் எனக்கவரே (2)

(எனக்கொத்தாசை வரும்...)

என் காலை தள்ளாட வொட்டார்
என்னைக் காக்கும் தேவன் உறங்கார் (2)
இஸ்ரவேலைக் காக்கும் நல்தேவன்
இராப்பகல் உறங்காரே (2)

(எனக்கொத்தாசை வரும்...)

வலப்பக்கத்தின் நிழல் அவரே
வழுவாமல் காப்பவர் அவரே (2)
சூரியன் பகலில் சந்திரன் இரவில்
சேதப்படுத்தாதே (2)

(எனக்கொத்தாசை வரும்...)

எத்தீங்கும் என்னை அணுகாமல்
ஆத்துமாவைக் காக்குமென் தேவன் (2)
போக்கையும் வரத்தையும் பத்திரமாக
காப்பாரே இது முதலாய் (2)

(எனக்கொத்தாசை வரும்…...)
        

Listen to the Song

Song B32
0:00 / 0:00
Speed:

Share this Song