B34
சொந்த இரத்தம்
சொந்த இரத்தம் சிந்தி என்னை
சொந்தமாக்கி கொண்டீரே நீர் (2)
நன்றி நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி என் இயேசய்யா (2)
(சொந்த இரத்தம்...)
மண்ணான மனிதன் எனக்காக
மரத்திலே தூக்கப்பட்டு சாபமானீரே (2)
நியாயப்பிரமாண சாபத்திற்கென்னை
நீங்கலாக்கி மீட்டுக்கொண்டீரே (2)
(நன்றி நன்றி...)
பாவ மனிதன் எனக்காக
பாடுகள் எல்லாம் ஏற்றுக்கொண்டீரே (2)
இரத்தத்தினாலே பிதாவை சேரும்
சிலாக்கியம் எனக்கு பெற்றுத்தந்தீரே (2)
(நன்றி நன்றி...)
என் மீது கொண்ட அன்பினாலே
அவமானமெல்லாம் ஏற்றுக்கொண்டீரே (2)
விலையேறப்பெற்ற கிருபையாம்
இரட்சிப்பை இலவசமாய் பெற்றுத்தந்தீரே (2)
(நன்றி நன்றி…...)