Home
B39

கல்வாரி அன்பை

          கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
கண்கள் கலங்கிடுதே
கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே (4)

கெத்சமனே பூங்காவினில்
கதறி அழும் ஓசை (2)
எத்திசையும் தொனிக்கின்றதே
எங்கள் மனம் திகைக்கின்றதே
கண்கள் கலங்கிடுதே (1)

(கல்வாரி அன்பை...)

சிலுவையில் வாட்டி வதைத்தனரோ
உம்மை செந்நிறம் ஆக்கினரோ (2)
அப்போது அவர்க்காய் வேண்டினீரோ
அன்போடு அவர்களை கண்டீரன்றோ
அப்பா உம் மனம் பெரிதே (1)

(கல்வாரி அன்பை...)

எம்மையும் உம்மைப் போல் மாற்றிடவே
உம் ஜீவன் தந்தீரன்றோ (2)
எங்களை தரை மட்டும் தாழ்த்துகிறோம்
தந்துவிட்டோம் அன்பின் கரங்களிலே
ஏற்று என்றும் நடத்தும் (1)

(கல்வாரி அன்பை…...)
        

Listen to the Song

Song B39
0:00 / 0:00
Speed:

Share this Song