Home
B4

துயரத்தில் கூப்பிட்டேன்

          துயரத்தில் கூப்பிட்டேன் உதவிக்காய் கதறினேன்
அழுகுரல் கேட்டீரையா (2)
குனிந்து தூக்கினீர் பரிசுத்தமாக்கினீர்
உமது காருண்யத்தால் (2)

குனிந்து தூக்கினீரே பரிசுத்தமாக்கினீரே
உமது காருண்யத்தால் பரிசுத்தமாக்கினீரே (2)

எனது விளக்கு எரியச் செய்தீர்
இரவைப் பகலாக்கினீர் (2)
எரிந்து கொண்டிருப்பேன் எப்போதும் உமக்காய்
என் ஜீவன் பிரியும் வரை (2)

எரிந்து கொண்டேயிருப்பேன் எப்போதுமே உமக்காய்
என் ஜீவன் பிரியும் வரை எரிந்து கொண்டேயிருப்பேன் (2)

நான் நம்பும் கேடகம் விடுவிக்கும் தெய்வம்
நீர்தான் நீர்தானையா (2)
தூயவர் தூயவர் துதிக்குப் பாத்திரர்
ஆறுதல் நீர்தானையா (2)

தூயவர் தூயவரே துதிக்குப் பாத்திரரே
ஆறுதல் நீர்தானையா துதிக்குப் பாத்திரரே (2)

சேனைக்குள் பாய்ந்தேன் உந்தன் தயவாலே
மதிலைத் தாண்டிடுவேன் (2)
புகழ்ந்து பாடுவேன் உம்மையே உயர்த்துவேன்
உயிர் வாழும் நாட்களெல்லாம் (2)

புகழ்ந்து பாடிடுவேன் உம்மையே உயர்த்திடுவேன்
உயிர் வாழும் நாட்களெல்லாம் உம்மையே உயர்த்திடுவேன் (2)
        

Listen to the Song

Song B4
0:00 / 0:00
Speed:

Share this Song