Home
B41

என் ஆத்துமாவும் சரீரமும்

          என் ஆத்துமாவும் சரீரமும்
என் ஆண்டவர்க்கே சொந்தம்
இனி வாழ்வது நானல்ல
என்னில் இயேசு வாழ்கின்றார் (4)

இயேசு தேவா அர்ப்பணித்தேன்
என்னையே நான் அர்ப்பணித்தேன் (2)
ஏற்றுக்கொள்ளும் ஏந்திக்கொள்ளும்
என் இதயம் வாசம் செய்யும் (2)

அப்பா உம் திருச்சித்தம்
அன்றாட உணவையா
நான் தப்பாமல் உம் பாதம்
தினம் எப்போதும் அமர்ந்திருப்பேன் - என் (4)

(இயேசு தேவா...)

கர்த்தாவே உம் கரத்தில்
நான் களிமண் போலானேன்
உந்தன் இஷ்டம்போல் வனைந்திடும்
என்னை எந்நாளும் நடத்திடும் (4)

(இயேசு தேவா…...)
        

Listen to the Song

Song B41
0:00 / 0:00
Speed:

Share this Song