B45
நீங்க இல்லாம வாழ
நீங்க இல்லாம வாழ முடியாதய்யா
உங்க கிருபை இல்லாம வாழ தெரியாதய்யா (2)
இயேசுவே என் எஜமானரே
நேசரே என் துணையாளரே (2)
(நீங்க இல்லாம...)
காலையிலே கிருபையும்
மாலையிலே மகிமையும்
தருகின்ற நல்ல தெய்வமே (3)
தாய் மறந்தாலும் மறப்பதில்லையே
தந்தை வெறுத்தாலும் வெறுப்பதில்லையே (2)
நன்றி சொல்லி துதிப்பாடி
மனதார தொழுகிறோம்
(நீங்க இல்லாம...)
இதுவரை நிற்பதும் இனிமேல் நிலைப்பதும்
எல்லாமே உங்க கிருபை தான் (2)
பெருமை பாராட்டிட ஒன்றும் இல்லையே
தாங்கி நடத்துவது உங்க கிருபையே (2)
நன்றி சொல்லி துதிப்பாடி
மனதார தொழுகிறோம்
(நீங்க இல்லாம…...)