B46
வாழ்வே நீர் தானய்யா
வாழ்வே நீர் தானய்யா வாழ்வே நீர் தானய்யா - என் (1) என் இயேசுவே என் ஜீவனே என் ஜீவனின் பெலனும் ஆனவர் என் வாழ்க்கையின் ஒளி விளக்கே நீர் போதுமே என் வாழ்விலே வாழ்வே நீர் தானய்யா - என் (1) (வாழ்வே நீர்...) நீர் மாத்ரம் இல்லையென்றால் மனிதர்கள் உயிரோடு விழுங்கிருப்பார்கள் (2) நிற்பதுமே நிலைப்பதுமே (1) கிருபையினால் தான் வாழ்கின்றேனே (1) (வாழ்வே நீர் தானய்யா...) நான்கு திசையில் அலைந்தேன் திரிந்தேன் ஆறுதல் சொல்ல யாருமில்லை (2) உன்னதமானவர் மறைவினில் வந்தேன் (1) நிம்மதி நிம்மதி அடைகின்றேனே (1) (வாழ்வே நீர் தானய்யா...) மாறிப்போகும் உலகினிலே மாறாத தெய்வம் நீர் தான் ஐயா (2) கிருபையின் மேலே கிருபையைத் தந்து (1) நிர்மூலமாகாமல் காத்தீரய்யா (1) (வாழ்வே நீர் தானய்யா…...)