B47
நிம்மதி தரும்
நிம்மதி தரும் தெய்வமும் நீர்தானய்யா நிம்மதியின் இயேசுவும் நீர்தானய்யா (2) என் நினைவெல்லாம் அறிந்திருக்கிறீர் என் நிலைமையெல்லாம் புரிந்திருக்கிறீர் (2) (நிம்மதி தரும்...) துன்பம் வந்த வேளையில் துணையானீரே துயரம் வந்த வேளையில் பெலனானீரே (2) (என் நினைவெல்லாம் ...) கருணையின் உள்ளமும் நீர்தானய்யா உம் கருணையால் நானும் வாழ்கிறேனய்யா (2) (என் நினைவெல்லாம் ...) என்னிலே ஒளியாக வந்தீரய்யா நீர் தங்கும் ஆலயமாய் மாற்றினீரய்யா (2) (என் நினைவெல்லாம் ...) அமைதியில்லா வாழ்வினில் அமைதி தந்தீரே அன்பு காட்டி அரவணைத்து பாட வைத்தீரே (2) (என் நினைவெல்லாம் …...)