Home
B5

எந்தன் ஆத்துமாவே கர்த்தரை துதி

          எந்தன் ஆத்துமாவே கர்த்தரை துதி கர்த்தரையே துதி
எந்தன் முழு உள்ளமே அவர் நாமத்தையே என்றென்றும் ஸ்தோத்தரி

அன்பின் கரத்தாலே தூக்கி எடுத்தீரே
கன்மலைமேல் என்னை நிறுத்தினிரே
உம்மைத் துதித்திடும் புதுப் பாடல் தந்தீரே
ஆயிரம் நாவுகள் போதாதே

(எந்தன் ஆத்துமாவே...)

நன்மை கிருபையினால் முடிசூட்டினீர் என்னையே
தூதரிலும் மேலாய் உயர்த்தினீரே
உம் நன்மையை நினைத்து நானென்றும் துதிப்பேன்
ஆயிரம் நாவுகள் போதாதே

(எந்தன் ஆத்துமாவே...)

நாட்கள் நகர்ந்திட்டாலும் காலம் கடந்திட்டாலும்
கர்த்தரே நீர் என்றும் மாறாதவர்
உம் கிருபையை என்றும் எண்ணி நான் துதிப்பேனே
ஆயிரம் நாவுகள் போதாதே

(எந்தன் ஆத்துமாவே...)
        

Listen to the Song

Song B5
0:00 / 0:00
Speed:

Share this Song