B6
பரலோகமே என் சொந்தமே
பரலோகமே என் சொந்தமே
என்று காண்பேனோ (2)
என் இன்ப இயேசுவை - நான்
என்று காண்பேனோ (2)
(பரலோகமே...)
வருத்தம் பசி தாகம் மன துயரம் அங்கே இல்லை (1)
விண் கிரீடம் வாஞ்சிப்பேன் விண்ணவர் பாதம் சேர்வேன் (1)
(பரலோகமே...)
சிலுவையில் அறையுண்டேன் இனி
நானல்ல இயேசுவே (1)
(பரலோகமே...)
இயேசு என் நம்பிக்கையாம் இந்த பூமியும் சொந்தமல்ல (1)
பரிசுத்த சிந்தையுடன் இயேசுவை பின்பற்றுவேன் (1)
(பரலோகமே...)
ஓட்டத்தை ஜெயமுடன் நானும் ஓடிட அருள் செய்வார் (1)
விசுவாச பாதையில் சோராது ஓடிடுவேன் (1)
(பரலோகமே...)